திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி…

நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் 02.04.2018 இன்று மாலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கெட்டபுலா சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ஓட்டுனரும், பயணித்த மற்றொரு நபரும் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் இருவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த முச்சக்கரவண்டியை பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்க்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com