சற்று முன்
Home / செய்திகள் / திலீபன் நினைவேந்தல்: உரிமைகோரும் யாழ் மாநகரசபை…

திலீபன் நினைவேந்தல்: உரிமைகோரும் யாழ் மாநகரசபை…

தியாகதீபம் தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் மாத்திரமே இடம்பெறும் என மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெறும்.

அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாகவே (9.00 மணிளயவில்) நினைவுத்தூபிக்கு முன்றலில் ஒன்றுகூட வேண்டும்.

நிகழ்வின் நினைவுச் சுடரினை ஏற்றும் மாவீரர்களின் பெற்றோரை மாநகரசபை தேர்வு செய்துள்ளதென்றும், நினைவுச்சுடரை தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தலாமென்றும் தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவு மற்றும் ஏனைய தேசிய நினைவு தினங்களை அரச கட்டமைப்புக்கள் அல்லாமல், பொது செயற்பாட்டாளர்கள் மூலம் ஒழுங்கமைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியபோதும், திலீபன் நினைவிடம் தமது ஆளுகைக்குள் அமைந்துள்ளதென குறிப்பிட்டு, கடந்த முறையை போலவே இம்முறையும் யாழ் மாநகரசபை முதல்வர் நினைவேந்தல் நிகழ்வை தன்னிச்சையாக ஒழுங்கமைத்துள்ளார்.

கடந்த 2017 திலீபன் நினைவேந்தல் நடந்து கொண்டிருந்த போது, திலீபன் நினைவிடத்திற்கு எதிர்ப்புறமாக ஆர்னோல்ட் பிராந்திய முகாமையாளராக இருக்கும் காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com