சற்று முன்
Home / செய்திகள் / திலீபன் நினைவிடத்தை மாநகரசபை பொறுப்பேற்க வேண்டும்: சீ.வீ.கே கடிதம்!

திலீபன் நினைவிடத்தை மாநகரசபை பொறுப்பேற்க வேண்டும்: சீ.வீ.கே கடிதம்!

நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடம் யாழ் மாநகரசபைக்கு உரியது, அதனை உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண அவைத்ததலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட்டிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தில்,

எதிர்வரும் 26.09.2019 ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவு தினம் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதனையொட்டி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை துப்புரவு செய்து நினைவு தின அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்துதவுமாறு வேண்டப்படுகிறது.

இந்த நினைவிடத் தூபி 1988 ஆம் ஆண்டில் நான் மாநகர ஆணையாளராக இருந்தபோது எமது செலவில் நிர்மாணிக்கப்பட்டது. அது அரச படைகளால் அழிக்கப்பட்டதனால் மீண்டும் 1998 இல் புனரமைக்கப்பட்டது. அதுவும் அரச படைகளால் அழிக்கப்பட்டாலும் நினைவிடத் தளம் அப்படியே உள்ளது.

ஆகவே, இந்த நினைவிடத்தை பராமரித்து நிர்வகிக்கும் உரிமையும் பொறுப்பும் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே உரியதாகும் என்பதால் அதனை வேறு எவருமோ அல்லது அரசியல் கட்சியோ உரிமை கோரமுடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com