‘திருமுறை நெறிச்செல்வர்’ பட்டமளிப்பும், இரு நூல்கள் அறிமுக விழாவும்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினச் சைவசித்தாந்த – சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தின் இணுவில் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘திருமுறை நெறிச்செல்வர்’ பட்டமளிப்பும், சைவ நீதி மற்றும் உண்மை விளக்கக் கதவம் நூல்கள் அறிமுக விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.

இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர் சபை கலாசார மண்டபத்தில் பேராசிரியர் திரு.க.தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நல்லைக்குருமணி ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகளின் ஆசியுரையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில், சைவ சித்தாந்த – சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டனர். பயிற்சி மைய இயக்குனர் சைவப்புலவர் ‘சித்தாந்தச் செம்மணி’ செல்லையா நவநீதகுமார் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இதேவேளை, ‘சைவநீதி’ (காசி யாத்திரைச் சிறப்பு மலர்) மற்றும் உண்மை விளக்கக் கதவம் ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இந்நூல்களின் அறிமுக உரையை முறையே விரிவுரையாளர் பால சண்முகனும், சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com