திருமலையில் விஷ்னு ஆலயத்தில் கைக்குண்டுகள் மீட்பு…!

திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் காணப்பட்ட 4 கைக்குண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்காரியாலய பொலிஸாரினால் இவை நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் FRAG- SFG-87 என பெயரிடப்பட்டிருந்தபோதும் அதன் அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com