திருமணத் தடைக்கு ‘செவ்வாய் தோஷம்’ காரணமா? #Horoscope

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த தோஷத்துக்கு உரிய பரிகாரங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்பு, ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி விவரிக்கிறார் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும். பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் தோஷம்தான். அதே நேரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை. அல்லது அந்த இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு மேற்கண்ட சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் தோஷம் இல்லை. ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
இது தவிர, சில ஜோதிஷ சாஸ்திரங்களில் இந்த தோஷத்துக்கு சில விலக்குகளும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படியான அமைப்புகள்கூட இல்லாத நிலையில் அந்த ஜாதகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.
செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.
அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.
சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ இந்த தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கக்கூடிய ராசியானது லக்னம், சந்திரன்,சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசியாக இருந்து, அந்த ராசிகளின் அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தாலும், 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை. உதாரணமாக செவ்வாய் இருக்கும் ராசி ரிஷபம் என்று வைத்துக்கொண்டால், ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் லக்னத்திலோ அல்லது 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.
சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் அவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com