சற்று முன்
Home / இந்தியா / திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 160 பேருக்கு கொரோனா

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 160 பேருக்கு கொரோனா

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில், சேவையில் ஈடுபட்டு வந்த 160 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “ஏழுமலையான் ஆலயம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில பொலிஸ் துறையைச் சேர்ந்த சிறப்புப் பொலிஸாரில் 60 பேருக்கும், திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் விநியோகத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 14 பேருக்கும், ஏழுமலையான் ஆலய அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 70 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் மொத்தம் 40 அர்ச்சகர்கள் உள்ளனர். இவர்களில் 14 அர்ச்சகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும், திருமலையிலுள்ள அர்ச்சகர்கள் பவனில் தனித்தனி படுக்கையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com