திருநெல்வேலி – கோண்டாவில் பகுதிகளில் தேடுதல் – 10 பேர் திடீர் கைது !!

(கோப்பு படம்)

திருநெல்வேலி மற்றும் கோண்டாவில் பிரதேசங்களில் இன்று (05) மாலை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய்ப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் இன்று மாலை பதட்டமான சூழல் நிலவியது. இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிசாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

இன்று (05) மாலை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கோண்டாவில், திருநெல்வேலி, பாற்பண்ணைப் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 10 வரையான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். சிலரிடம் தம்மை அடையாளப்படுத்தக்கூடியவகையில் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை.  அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்ம். இவர்களை  நாளை நீதிமன்றில்  ஆயர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகள் என சில பெற்றோர் கோப்பாய் பொலிசிற்குச் சென்று அடையாளப்படுத்தியபோதும் விசேட அதிரப்படையினரே கைது செய்து ஒப்படைத்தனர் எனவே அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என கூறப்பட்டதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com