திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய கொடியேற்றம்

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் 15ஆம் திகதி காலை 09 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி மாலை தங்கரதமும் , 24ஆம் திகதி மாலை திருமஞ்ச திருவிழாவும் , 25ஆம் திகதி மாலை திருக்கைலாய வாகனமும் , 27ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலங்களில் வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும் , மாலை 06.15 மணிக்கும் நடைபெறும்.

தேர் மற்றும் தீர்த்த திருவிழா அன்று காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com