திருநெல்வேலியில் விபத்து – மூவர் காயம் – பெருமளவு பொருட்சேதம்

இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி  போட்டு ஓடி, தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளாகியதில் , மூவர்  காயமடைந்து உள்ளதுடன் , பெருமளவான பொருட்செலவு ஏற்பட்டு  உள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் , கொக்குவிலை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான மகாதேவன் வசந்தரூபன் (32) , முச்சக்கர வண்டியில் பயணித்த பார்த்தீபன் தம்சா (வயது 34) , அவரது மகனான பார்த்தீபன் சுகத்திரியன் (வயது 5) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
புன்னாலைக்கட்டுவானில் இருந்து யாழ்.நகர் நோக்கி பலாலி வீதி வழியாக சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டு மிக வேகமாக சென்று கொண்டிருந்த வேளை திருநெல்வேலி சந்திக்கும் , தபால்பொட்டிசந்திக்கும் இடையில் இலங்கை போக்குவரத்து சபை  பேருந்தை தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
தனியார் பேருந்து முச்சக்கர வேண்டியுடன் மோதியதும் கட்டுபாட்டை இழந்து வீதியால் வந்து கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளையும் மோதி தள்ளியது.
தொடர்ந்தும் கட்டுபாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த தனியார் வங்கியின் பெயர் பலகை பொருத்தப்பட்டு இருந்த கம்பத்தை மோதி தள்ளியது. அதில் பெயர் பலகை கம்பம் வீழ்த்ததில் வங்கியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்து உள்ளன.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று , ஐந்து  மோட்டார் சைக்கிள் , தனியார் வங்கியின் மின் பெயர் பலகை  மற்றும் வங்கியின் கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளன.
தனியார் பேருந்தின் பின் புற சக்கரடயர்களில்  உராய்வு  தன்மை  இல்லாமையாலையே பேருந்தை சாரதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது போனதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் , தனியார் பேருந்து சாரதியையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds