திருட்டுக்குற்றத்தில் பெண் கைது

திருட்டுக் குற்றசாட்டில் விளக்கமறியலில் உள்ளவரின் மனைவி பெண்ணொருவரின் பணத்தை திருடிய குற்றத்தில் யாழ்ப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.பஸ் நிலையப்பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுவருடத்தை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்து விட்டு யாழ்.பஸ் நிலையத்தில் வீடு செல்வதற்கு பஸ்க்காக காத்திருந்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் களவாடி உள்ளார்.
பணத்தினை களவாடிய பெண் அதன் பின்னர் பதட்டமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அப்பகுதியில் சிவில் உடையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் அவதானித்து குறித்த பெண்ணிடம் விசாரணை செய்துள்ளனர்.
அதன் போது குறித்த பெண் மேலும் பதட்டமடைந்து முன்னுக்கு பின்னர் முரணான தகவல்களை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது தான் பணத்தினை களவாடியதனை ஒப்புக்கொண்டதுடன் யாரிடம் களவாடினார் என்பதனையும் காண்பித்தார்.
அதன் பின்னர் பொலிசார் களவு கொடுத்தவரிடம் விசாரணையை மேற்கொண்ட போதே தமது பணம் களவு போன விடயம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.
அதனை தொடர்ந்து களவாடிய பெண்ணை பொலிசார் கைது செய்ததுடன் களவாடப்பட்ட 90 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் ஏற்கனவே திருட்டுக்குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com