திருகோணமலை: 3 மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக, ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து, சந்தேகநபர்கள் அக் கிராம மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் மூதூர் பொலிஸாரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் இணைந்து இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com