சற்று முன்
Home / செய்திகள் / திருகோணமலை ஆலய பிரகாரத்தில் குடை பிடித்து நினைவேந்திய ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்

திருகோணமலை ஆலய பிரகாரத்தில் குடை பிடித்து நினைவேந்திய ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்

திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு நேற்று (18) சென்றிருந்த ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஆதரவாளர்கள் பக்தர்கள் புடைசூழ ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக சுடரேற்றி வணக்கம் செய்துள்ளார்.

குறித்த நேரத்தில் அவருக்கு சிலர் குடைபிடிக்க அவர் நினைவுச் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், தமிழரசுக் கட்சி திருகோணமலை மாவட்ட தலைவர் சி.தண்டாயுதாணி, திருகோணமலை நகர சபை தலைவர் நா.இராசநாயகம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை கடந்த ஆண்டு முள்ளிவாய்காலிற்கு நினைவேந்தல் மேற்கொள்ள வந்திருந்தஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மக்களால் அங்கிருந்து விரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com