திருகோணமலையைக் கைப்பற்ற இந்தியா முயற்சி

திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் குறித்த எண்ணெய் குதங்களுடன், சுற்றியுள்ள இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றதென தெரிவித்து, இந்திய இராணுவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
திருமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பாவனையில் உலகின் மூன்றாமிடத்தில் உள்ள இந்தியா, அதனை அடிப்படையாக வைத்தே இலங்கைக்குள் நுழைந்து முக்கிய இடங்களை கைப்பற்ற முயற்சிக்கின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சீனா போன்ற நாடுகளைச் சமாளிப்பதற்கு இந்தியாவுக்குத் திருகோணமலை துறைமுகம் தேவைப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ள சரத் வீரசேகர, எண்ணெய்க் குதங்களில் எரிபொருளை இந்தியா களஞ்சியப்படுத்தத் தொடங்கியதும் இந்தியாவின் போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்துக்குத் தொடர்ச்சியாக வரும் என்றும், எண்ணெய் குதங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து அங்கு இந்திய இராணுவத்தை நிலைநிறுத்தும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com