திருகோணமலையில் கலாசார நிலையங்கள் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, கோமரன்கடவெல, மற்றும் மொரவெவ ஆகிய பிரதேசங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  03 கலாசார நிலையங்கள் எதிர்வரும்  15 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளன. 

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் உள்ளக அலுவல்கள் வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த கலாசார நிலையங்களை திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச கலாசார நிலையம் காலை 10 மணிக்கும், கோமரன்கடவெல கலாசார நிலையம் மதியம் 2 மணிக்கும், அமைச்சரினால் திறந்து வைக்கப்படும். இந்நிகழ்வுகளில பிரதேச செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com