திருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

திருகோணமலை இலிங்க நகரில் உள்ள   செவிப்புலன் அற்றோர் பேச முடியாதோர்க்குரிய பாடசாலைக்கு மல்டிமீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் மற்றும் கற்றல் உபகரணங்கள் மார்ச் 5 ஆம் திகதி திருகோணமலை ரோட்டரி கழகத்தால் பாடசாலை இயக்குனர் திருமதி பாலசிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மிக குறுகிய காலத்தில் இந்த பயனுள்ள அன்பளிப்பை வழங்கிய திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இதட்கு அனுசரணை வழங்கிய இங்கிலாந்து பெத்தோவன் (Bathavon) ரோட்டரி கழக உறுப்பினர் ட்ரிம் வெஸ்ட்ப்ரூக் (Rtn.PP.Tim Westbrook) அவர்களுக்கும் பாடசாலை சார்பில் தனது மனமார்ந்தநன்றிகளை தெரிவித்துக்கொண்டார். இந்த பயனுள்ள அன்பளிப்பை வழங்கிய தன் மூலம் எதிர்காலத்தில்எளிதில் கற்றல் செயல் முறைகளை நடை முறைப்படுத்த முடியும் என கூறினார்.

இதை தொடர்ந்து கற்றல் சம்பந்தமான படங்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com