சற்று முன்
Home / செய்திகள் / தியாக தீபம் திலீபன் நினைவாக கலை நிகழ்வுகள் – அறிவித்தல்

தியாக தீபம் திலீபன் நினைவாக கலை நிகழ்வுகள் – அறிவித்தல்

தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவாக கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்குபெற விரும்புவோர் தங்களது விபரங்களையும், ஆக்கங்களையும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

  1. கவிதை – தியாக தீபம் திலீபன் அவர்களது தியாகங்களை வெளிக்கொணரும் கவிதைகள் மட்டும்.
  2. பாடல்கள் – தியாக தீபம் திலீபன் அவர்களது தியாகங்களை வெளிக்கொணரும் பாடல்கள் மட்டும்.
  3. பேச்சு, நாடகங்கள். வில்லுப்பாட்டு – தியாக தீபம் திலீபன் அவர்களது தியாக வரலாற்றை வெளிப்படுத்தும் வகையிலான ஆக்கங்கள்.

குறிப்பு:

நிகழ்வில் பங்கு பெற விரும்புவோர் தங்களது ஆக்கங்களை எதிர்வரும் 20.09.2019 ஆம் திகதிக்கு முன்னதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் கைகளுக்கு கிடைக்குமாறு கீழுள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேற்படி கலை நிகழ்வுகள் பாடசாலை மற்றும் பலகலைக்கழக மாணவர்களிமிருந்து கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

முன் அனுமதி பெற்ற நிகழ்வுகள் மட்டுமே மேடையேற்ற அனுமதிக்கப்படும். நேரப் பிரச்சினை காரணமாக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான நிகழ்வுகள் மட்டும் மேடையேற்றப்படும்
என்பதனையும் தங்களுக்கு பணிவுடன் அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு: 0765371949:
Email ID: thilepanmemorial@gmail.com
FaceBook ID: Thilepan Ninaiventhal

நன்றி

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
பொன் குணரத்தினம்
ஒருங்கிணைப்பாளர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com