சற்று முன்
Home / செய்திகள் / தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி ..

தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி ..

தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று வடக்கு கிழக்கு எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

1987ம் ஆண்டு செப்ரெம்பர் 15ம் திகதிஇந்திய அரசிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். எனினும், இந்த போராட்டத்தை இந்தியா கணக்கிலெடுக்காத நிலையில், திலீபன் 32 வருடங்களின் முன்னர் இதே நாளில்- செப்ரெம்பர் 27ம் திகதி- உயிர் நீத்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேர்மைத்தன்மையை அம்பலப்படுத்தியதுடன், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியிருந்தது.

தமிழர்களின் அகிம்சை வழி மொழியை இந்தியா புரிந்து கொள்ளாததையடுத்து, பின்னர் இந்தியா- புலிகள் போர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபன் நினைவேந்தனை இன்று வடக்கு, கிழக்கு உணர்வுபூர்வமாக கடைப்பிடித்தது.

நல்லூர்

நல்லூரில்அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சடரினினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மண்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com