சற்று முன்
Home / செய்திகள் / தினமும் 24 கிலோ மீற்றர் கால்நடையாக பள்ளி செல்லும் மாணவர்கள் – நேற்றைய செய்திக்கு இன்று நடவடிக்கை !!

தினமும் 24 கிலோ மீற்றர் கால்நடையாக பள்ளி செல்லும் மாணவர்கள் – நேற்றைய செய்திக்கு இன்று நடவடிக்கை !!

தினமும் கால் நடையாக 24 கிலோ மீற்றர் பாடசாலைக்கு நடந்து செல்லும் முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு மாணவர்கள் என்ற தலைப்பில் நேற்று வெளியிட்ட செய்திக்கு பலன் கிடைக்கும் விதத்தில் ஜனாதிபதி உடனடி தீர்வை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் (பெப் 16) ஊடகங்களில்வெளியிட்டிருந்த ‘போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டு அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதிஊடகப் பிரிவின் தமிழ் பிரிவின் தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும் பொதுமக்களினதும் பிரயாண வசதிக்காக பஸ் சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் சேவை எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து (பெப் 21) பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு, இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் பொறுப்பதிகாரி குணசீலன் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தப் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அரச அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் 2010ஆம் ஆண்டிலிருந்து முறையிட்ட போதிலும் எந்தவொரு சாத்தியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இது தொடர்பில் குறித்த செய்தியினை வாகீசமும் நேற்று  வெளியிட்டிருந்தது

கல்வித் தேடலுக்காக தினமும் 24 கி.மீ கால்நடைப் பயணம்; ​மாந்தை கிழக்கு மாணவர்களின் அவலம்

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com