சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் கையளிக்கும் நடவடிக்கை இன்றும், நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக, பிரதேச தபால் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 மற்றும் 26 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த தினங்களில் மக்கள் வீடுகளிலிருந்து தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com