சற்று முன்
Home / செய்திகள் / தாயாரின் காதை கடித்து குதறிய மகன் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

தாயாரின் காதை கடித்து குதறிய மகன் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

தாயாரின் காது ஒன்றைக் கடித்துக் குதறிய தனயனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது தாயாரின் காது ஒன்றைக் கடித்துத் துண்டாடினார்.

கடற்தொழில் செய்யும் அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தாயாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டார். ஆத்திரமடைந்த அவர், தாயாரின் காது ஒன்றைக் கடித்தார். காது துண்டானது. தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாயாரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் அவரது மகனைக் கைது செய்தனர். இளைஞன் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மன்று சந்தேகநபரை வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com