சற்று முன்
Home / செய்திகள் / தாயகம் திரும்பிய அகதிகள் காங்கேசன்துறையில் கைது

தாயகம் திரும்பிய அகதிகள் காங்கேசன்துறையில் கைது

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் வாடகைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.

திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com