சற்று முன்
Home / செய்திகள் / தான் முன்னாள் முதல்வர் என்ற தோரணையில் சபை மாண்பை புறந்தள்ளினாரா யாழ் மாநகர உறுப்பினர் ? காணொளியால் சர்ச்சை ??

தான் முன்னாள் முதல்வர் என்ற தோரணையில் சபை மாண்பை புறந்தள்ளினாரா யாழ் மாநகர உறுப்பினர் ? காணொளியால் சர்ச்சை ??

சபை அமர்வின்போது தனக்கு காலில் சத்திரசிகிச்சை மேற்கொண்டாதால் தன்னால் எழுந்து நின் உரையாட முடியது எனக்கூறி இருந்து உரையாற்றிய மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சபை அமர்வு நடைபெறாத தேனீர் இடைவேளையின்போது சபையில் நீண்டநேரம் எழுந்து நின்றவாறு சக உறுப்பினர்களுடன் அளவளாவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த உறுப்பினர் தான் முன்னாள் முதல்வராக இருந்தவர் என்ற தோரணையில் சபையின் மாண்பினைப் பேணாது திட்டமிட்டு நடந்துகொள்கிறாரா என்ற சந்தேகங்களை வலுவாக்கியுள்ளது.

யாழ் மாநகரசபையின் 02 ஆவது அமர்வு இன்று யாழ் மாநகர சபா மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பரானது. அதன்போது முன்வைக்கப்பட்ட கடந்த அமர்வின் அறிக்கை குறித்து ஈபிடிபி உறுப்பினரான யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இருக்கையில் இருந்தவாறே பதிலளிக்க முற்பட்டார்.

இந்நிலையில் சபையின் மாணிபினைப் பேணும்வகையில் எழுந்து நின்று உரையாற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டினால் கூறப்பட்ட போது தனக்கு காலில் சத்திரசிகிச்சை செய்துள்ளதாகவும் தன்னால் எழுந்து நிற்க முடியாது எனவும் வேண்டுமானால் ஒரு மணித்தியாலத்துள் தன்னால் மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் எனவும் கூறி தொடர்ச்சியாக இருந்தவாறே கருத்துக்கள் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

எனினும் சபை தேனீர் இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டபோது சபை மண்டபத்துக்குள் நீண்டநேரம் எழுந்து நின்றவாறு தனது கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் உரையாடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இதேவேளை கடந்த முதலாவது அமர்விலும் குறித்த முன்னாள் முதல்வரான உறுப்பினர் எழுந்து நின்று உரையாற்ற மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com