தான் அணிந்த முகமூடியை சுமந்திரன் தானே கிழித்துவிட்டார் ! – கஜேந்திரகுமார்

vakeesam-braking-newsமுப்பது ஆண்டுகளாகப் போராடி என்னத்தைக் கண்டீர்கள் என சுமந்திரன் வெளிப்படைய கூறியதை வரவேற்கின்றோம். இதுவரை காலமும் தமிழ்த்தேசிய முகமூடியுடன் உலாவந்த அவரது உண்மை முகம் வெளிப்பட்டள்ளது. அவர் அரசியலைப் பழகி மக்களை ஏமாற்ற வெளிக்கிட முன்னர் நடைபெற்ற பகிரங்க விவாதம் ஒன்றில் விடுதலைப் போராட்டத்தின் தோல்வியானது தர்மத்தின் வெற்றி எனக் கூறியிருந்தார். அது அன்று ஊடகங்கள் வாயிலாக பெரிய அளவில் வெளிக்கொணரப்படவில்லை. இதுதான் அவரது உண்மை முகம். அந்த உண்மை முகத்தைத்தான் வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும்பொருட்டு செவ்வாய்க்கிழமை (18) யாழ் ஊடக அமைத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்துரைத்த அவர்,

விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டால் அதன்பின் வருகின்ற தமிழ்த் தலைமைகள் தங்கள் எடுபிடிகளாக இருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்தே சர்வதேச சமூகம் புலிகளை அழித்து இந்த எடுபிடிகளை முதன்மைப்படுத்தியது.

தொடர்ச்சியக தேர்தல்களில் தோல்விகண்டுவந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்கூட விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட பின்புதான் தேர்தலில் வெல்லத் தொடங்கினார். புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் யுத்தத்தை வென்றதற்காக அவர் அரசாங்கத்திற்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

அந்தவரிசையில் தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் சிக்கவைக்கின்ற காய்நகர்த்தல்களைத்தான் 2009 இல் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துவருகின்றது. தற்போது எழுக தமிழின் எழுச்சியானது தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வு ஒன்றினை தரசு தராது என உரும்பொது அரசிற்கு வழங்கிவிரும் ஆதரவுகளை விலக்கிக்கொள்வோம் என அவர்களைக் கூறவைத்திருக்கின்றது.

தமிழ் மக்களின் துணையோடு அரியணை ஏறிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிராக தற்போது பயங்கரவாதச் சட்டத்திற்கு மாற்றீடாக பயங்கரவாத எதிர்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவர முயல்கின்றது. அன்றைக்கு ஆட்சி மாற்றம் நிகழவேண்டும் எனில் இவ்வாறான சட்டங்களையாவது நீக்கவேண்டும் என பேரம் போசியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.  புதிதாக வரவிருக்கின்ற பயங்கரவாத எதிர்புச் சட்டத்தால் தமிழ் மக்களிற்கு ஏற்படப்போகும் துயரங்களிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பொறுப்புக்கூறவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com