தாங்கள் சிறந்த ஊழல்வாதிகள் என்று ஐ.தே.கவிற்கும் தெரியும் – மஹிந்தானந்த அளுத்கமகே

கடந்த ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி, தற்போதைய அரசாங்கம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பது, முழு நாடும் மட்டுல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் கூட ஏற்றுக் கொண்டுள்ள விடயம் என, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து வௌியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, குற்றவாளிகள் மூவர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக அர்ஜூன் எலோஷியஸ், அதற்கு அடுத்ததாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் என தெரிவித்த அவர், மூன்றாமவர் இதன் பிரதான மூளையாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com