தாக்குதல் நடத்தியவர்களிற்கு எதிராக அணிதிரண்டு வாக்களியுங்கள் – மாவை இறுதி நேரப் பிரச்சாரம்

(யாழ் – 16.08.2015 ) தமது அலுவலகம் மீது தாக்குதல் நடைத்திதை மக்கள் கேள்விப்படும்போது மக்கள் அதிகளவில் கோபம் கொள்வார்கள் எனவும் அதன் மூலம் மக்கள் அலை எனத்திரண்டு தமக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சித் தலைவரும் வேட்பாளருமான மாவை சேனாதிராஜா  இச் சம்பவத்தினைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் இங்குள்ள மக்களைத் தூண்டி தமக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பெருமளவில் திரண்டு வாக்களிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் பதட்டமடையத் தேவையற்ற சம்பவம் எனவும் வீதியிலுள்ள வெளிக் கேற்றின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் எனினும் இச்சம்பவத்திற்கு பதிலடி வளங்கும் நடவடிக்கையாக மக்கள் அலைஎனத் திரண்டு தமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds