தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரி அடையாளம் காணப்பட்டார்

CID‘ரிவிர’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோனும் அவருடைய மனைவி தம்மிகா மல்காந்தி தென்னக்கோனும் தாக்கப்பட்ட சம்பவத்தில் புலனாய்வு அதிகாரி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜண்டை ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அடை யாள அணிவகுப்பின்போது, சந்தேக நபரை தென்னகோன் அடையாளம் காட்டியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தில் வைத்து உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் முன்னிலையில், அடையாளம் காணும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த சந்தேக நபர் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபராவார்.

அடையாளம் காணும் அணிவகுப்பை அடுத்து சந்தேக நபரான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு வெளியே இது தொடர்பாக கருத்து தெரிவித்த தென்னக்கோன், தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்னும் கைது செய்யப்படாமலிருப்பதால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முன்பு இந்த சம்பவம் முறையாக விசாரணை செய்யப்படவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com