தாக்குதலிற்கு தயாராகும் பிக்குகள் – சமஷ்டி வந்தால் நாடாளுமன்றை சுற்றிவளைப்போம் என எச்சரிக்கை

சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு பாதகமான நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டால் பௌத்த மாநாயக்க தேரர்கள் ஆயிரக் கணக்கில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு அரசியல் அமைப்பினையும் அரசாங்கம் கொண்டு வரக் கூடாது.
நாட்டுக்கு பாதகமான சட்டங்கள் இயற்றப்பட்ட போது பௌத்த பிக்குகள் நாடாளுமன்றிற்குள் பிரவேசித்து அவற்றை கிழித்து எரித்த வரலாறு உண்டு.
நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் அமைப்பு குறித்து விஹாரைகள் தோறும் தெளிவூட்டப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com