தவறாக முகநூல் பயன்படுத்திய 186 பேர் அடையாளங்காணப்பட்டனர் – கைது செய்ய நடவடிக்கை !!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் இன முறுகல்களையும் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களின் 186 முகநூல் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவற்துறையினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் எனவும் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் இணைய பயன்பாடு கைதான இருவர் விளக்கமறியலில்…

இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9, 10 ஆகிய இரு தினங்களில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொடை மற்றும் ஹோமாகம பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com