தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழ் தலைவர்களில் வெற்றிகண்ட தலைவர்

தந்தை செல்வாவில் இருந்து இரா.சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு தலமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப். போராட்டத்தினாலேயே ஈழத்தமிழர்களுடைய பிரச்சினை முதன் முறையாக உலகறியச் செய்யப்பட்டது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொணடு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தந்தை செல்வாவின் காலகட்டத்தில் உள்நாடடில் ஒப்பந்தங்களை செய்து, அதன் ஊடாக சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இனப்பிரச்சினைக்காக தீர்வு காண்படதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன ஆனால் எவையும் நடமுறைப்படுத்தப்படவில்லை. சிங்கள தலைவர்களால் தந்தை செல்வா ஏமாற்றப்பட்டார். இறுதியில் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி மறைந்தார்.

இதன் பின்னர் அமிர்தலிங்கம் பதவியேற்ற தலமைதாங்கிய போது, இந்தியாவை முழுமனதாக நம்பி, அந்நாட்டின் துணையுடன், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கொண்டுவந்தார். அவ் ஒப்பந்தத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்காக தீர்வினை காண்பதற்கு முயட்சித்தர்.

அம்முயட்சியும் துரதிஸ்ரவசமாக கைநழுவிப் போயிருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் நடமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்றும் கூட இலங்கை அரசியல் அமைப்பிலே அதிகார பரவலாக்கல் என்ற வகையில் உள்ள ஒரே ஒரு சட்டவிதி 13 ஆவது திருத்தச்சட்டம்தான். அது முழுமையாக அமுல்படுத்தப்படாவிட்டாலும், அதுதான் ஒரு சட்டவிதியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இதன் பின்னர் தமிழர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலமை தாங்கினார். அவருடைய வழி ஆயுதப் போராட்ட வழியாக இருந்தது. அவருடைய வழியூடாகத்தான் ஈழத்தமிழர்களுடைய பிரச்சினை உலகேங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகேங்கும் கொண்டு சென்றதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிபெற்றிருந்தார். இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கினை அடயவில்லை. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போது இரா.சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி ஜ.நா சபை வரைக்கும் சென்றுள்ளார் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் ஊடாக தீர்வு காணும் வழிமுறைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சம்பந்தருடைய முன்னெடுப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com