தலவாக்கலையில் விபத்து…

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்லை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் 05.10.2016 அன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட பின் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற சொகுசு பஸ்ஸை குறித்த இடத்தில் வைத்து கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற (டீமோ பட்டா) சிறிய ரக லொறி ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி எதிரே வந்த மோட்டர் சைக்களுடன் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதையடுத்து அதனை பின் தொடர்ந்து வந்த மற்றுமொரு மோட்டர் சைக்கிள் ஒன்றும் அதன் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.img_1689 img_1697 vlcsnap-2016-10-05-16h35m08s44 vlcsnap-2016-10-05-16h35m53s241

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com