தலதா அத்­து­கோ­ரள தனது நேர்­மையை நிரூ­பித்து காண்பிக்கட்டும்!

புதி­தாக ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள ஊழ­லுக்கு எதி­ரான விசேட நீதி­மன்­றத்தில் ட்ரயல் அட்பார் முறை­மையின் மூலம் மத்­திய வங்கி தொடர்­பான விசா­ர­ணையை முதலில் நடத்தி காண்­பிக்­கு­மாறு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ‍ஹேரத் சபையில் நீதி­ய­மைச்­ச­ருக்கு நேர­டி­யாக சவால் விடுத்தார்.

இதன்­ ஊ­டாக நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள முடி­யு­மானால் தனது நேர்­மையை நிரூ­பித்து காண்­பிக்­கட்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற  2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்­டத்தில் நீதி, சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி அமைச்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி கோப் குழு அதன் அறிக்­கையை வெளி­யிட்டு ஒரு வரு­ட­மா­கின்­றது. இந்­நி­லையில் ஏற்­க­னவே இது தொடர்­பான பூரண விசா­ரணை  அறிக்­கையை கோப் குழு வெளி­யிட்ட தரு­வாயில் ஜனா­தி­ப­தி­யினால் பிறி­தொரு விசா­ரணை  ஆணைக்­குழு நிய­மிக்கப்பட்டது.

இந்த தரு­வாயில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது. இன்றும் (நேற்று) பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிக்க சென்­றுள்ளார். இதன்­பி­ர­காரம் பிர­தமர் சாட்­சி­ய­ம­ளித்த பின்னர் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்­கைகள் நிறைவு பெற்று விடும் என எதிர்­பார்க்­கின்றோம். எனினும் அதன் நட­வ­டிக்­கைகள் நிறைவு பெற்­றாலும் ஆணைக்­குழு தனது அறிக்­கையை கொண்டு நேர­டி­யாக குற்­ற­வா­ளியை தண்­டிக்க முடி­யாது. அதற்கு பதி­லாக ஆணைக்­குழு தனது அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்கும். அதன்­பிற்­பாடு ஜனா­தி­பதி சார்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு குறித்த அறிக்கை அனுப்­பி­வைக்­கப்­படும். அதன் பின்னர் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­படும்.

ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைக்கு வழக்கு தொடர்ந்து அது தொடர்­பான தீர்ப்பு வரு­வ­தற்கு மூன்று ஆண்­டுகள் செல்லும். அதன்­போது இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லமும் நிறைவு பெற்று விடும். இத­னை­ய­டுத்து மத்­திய வங்கி மோசடி குற்­ற­வா­ளிகள் தப்­பித்து விடுவர். ஆகவே ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பார்த்து கொண்­டி­ருந்தால் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை கிடைக்­காது. மத்­திய வங்கி மோசடி என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும்.

இது இவ்­வாறு இருக்கும் போது அண்­மையில் ஊழல் ,மோச­டிக்கு எதி­ராக விசேட நீதி­மன்­ற­மொன்றை அமைப்­ப­தற்கு நீதி­ய­மைச்சர் முன்­வைத்த யோச­னையை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்­ளது.

எனவே ஊழல் மோச­டிக்கு எதி­ரான விசா­ர­ணையை விசேட நீதி­மன்­றத்தின் ஊடாக ஆரம்­பிக்க முடியும். ஏனெனில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வ­ரா­விட்­டாலும் தற்­போ­தைக்கு கோப்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அது­மாத்­தி­ர­மின்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே குறித்த கோப் குழு அறிக்­கையை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் கைய­ளித்­துள்ளார்.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கோப் குழு அறிக்கை நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­வ­தற்கு போது­மா­ன­தாகும். எனினும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் இது தொடர்பில் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள கோப் குழுவின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நீதி­ய­மைச்­சினால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள விசேட நீதி­மன்­றத்தின் ட்ரயல் அட்பார் விசாரணை முறைமையின் மூலம் மத்திய வங்கி மோசடி தொடர்பான விசாரணையை முன்னெடுக்க முடியும். எனவே தலதா அத்துகோரள நேர்மையான நீதியமைச்சராக இருந்தால் மத்திய வங்கி மோசடி தொடர்பில் புதிய விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்து காண்பியுங்கள். அதனை விசாரணைக்கு எடுத்து நீதியமைச்சர் தன்னுடைய நேர் மையை நிரூபித்து காண்பிக்கட்டும் என் றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com