‘தர்ம யுத்தம் தொடரும்’ – முன்னாள் முதல்வர் பன்னீர்ச்செல்வம்

அ.தி.மு.க சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பசுமை வழிச்சாலையில் இருக்கும் அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் மத்தியில், ‘தர்ம யுத்தம் தொடரும்’ என்று பேசியுள்ளார்.

‘ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் நிறுவப்படும். இதுவரை ஆதரவு அளித்து வந்த மாணவர்கள், தாய்மார்கள், பொது மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் செல்வதை தடுப்போம். அதுவரை தர்ம யுத்தம் தொடரும்.’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com