தருவதாக கூறிய ஜனநாயகம் இது தானா ?

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர், குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில்,  விடுதலை செய்யபப்டாமையை கண்டித்து  யாழின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

‘குமார் குணரட்னம் சிறையிலடைக்கப்பட்டு இரண்டு மாதம்’,  “தருவதாகக் கூறிய ஜனநாயகம் இதுதானா? ” ஆகிய வாசகங்களை உள்ளடக்கியதாக இந்த சுவரொட்டிகள் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு சட்டவிதிமுறைகளை மீறி இவர் இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் குமார் குணரட்னம், கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர்

தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com