தராகி சிவராம் ஞாபகார்த்த முதல் விருது மறைந்த அஸ்வின் சுதர்சனுக்குக்கானது

மறைந்த மாமனிதர் தராகி டி சிவராமினை நினைவுகூரும்வகையில் தராகி சிவராம் ஞாபகாத்த விருது ஒன்றினை வருடம் தோறும் தராகி சிவராமின் நினைவுதினத்தில் வடக்கு-கிழக்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து வழங்க யாழ். ஊடக அமையம் தீர்மானித்துள்ளது.

அவ்வகையில்  தமிழர் தாயகத்தில் துணிச்சலுடனும், ஊடறஅறத்துடனும், செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில்  இவ்வாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் தராகி சிவராம் ஞாபகாத்த முதல் விருதினை மறைந்த கேலிச்சித்திர கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கானதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது எதிர்வரும் 29.04.2017 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சியில் நடைபெறும் மாமனிதர் தராகி டி சிவராமின் 12 ஆவது நினைவு தின நிகழ்வில் அஸ்வின் சுதர்சனின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com