தயாரிப்பாளர் சங்க நிதி வசூலிப்பு நிகழ்வில் எஸ்.பி.பி யும் இளையராஜாவும் இணைவர் – விஷால்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கள் சங்க தேர்தலில் போட்டியிடும், ‘நம்ம அணி’ யின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக் கான வேட்பாளரும், நடிகருமான விஷால் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்தில் முதல் முறையாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் ஆகிய மூவரும் இணைந்து களமிறங்கி பணியாற்ற உள்ளோம். ‘நம்ம அணி’-க்கு மிகுந்த ஆதரவு உள்ளது. சங்க மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி வசூலிக்கும் விதமாக, மிக விரை வில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் பங்கேற்க பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணி யத்தை கண்டிப்பாக அழைப்போம். எந்த ஒரு நடிகரும் தனக்கு அதிக சம்பளம் வேண்டுமென தயாரிப்பா ளர்களிடம் மிரட்டிக் கேட்பதில்லை. மார்க்கெட் மதிப்புக்கேற்ப கேட்கின்றனர். என்றார்.

செயற்குழு உறுப்பினர் பதவிக் குப் போட்டியிடும் இயக்குநர் பாண்டிராஜ் கூறும்போது, “இது வரை தயாரிப்பாளர்களாக இருந்த வர்கள், அவரவர் படம் எடுக்க மட்டுமே உழைத்துள்ளனர். மற்ற வர்களுக்காக எதுவும் செய்ய வில்லை. ஆனால், தற்போது நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்துள்ளதால் எதுவேண்டுமானாலும் செய்ய லாம்” என்றார்.

இளையராஜாவுக்கு பாராட்டு

திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கூறும்போது, “ஒரு பாடல் பல ருடைய உழைப்பு அல்ல. இசை யமைப்பாளரின் உழைப்பு. டியூனில் இருந்துதான் பாடலே தொடங்குகிறது. காப்புரிமை மிக மிக முக்கியம். இளையராஜாவின் அறிவிப்புக்கு பிறகு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்காக இளையராஜாவை பாராட்டுகிறோம். நாங்கள் வெற்றி பெற்றதும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்” என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும் போது, “தயாரிப்பாளர்களை பாது காக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம். இதில் ஏன் சாதி, மொழியை இழுக் கிறீர்கள். உங்கள் பிழைப்பு போய் விடும் என்ற பயமா?” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும்போது, “தேர்தலில் நின்றால் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே தாணு போட்டியிட வில்லை. ரஜினியிடம் இருந்து 40 ஆண்டுகளாக கிடைக்காத கால்ஷீட், தயாரிப்பாளர் சங்க தலை வரான பிறகு தாணுவுக்கு உடனே கிடைக்கிறது. இது எப்படி என்பது குறித்து அவர் பதில் கூற வேண்டும்” என்றார். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஏ.எல்.உதயா உட்பட பலரும் பேசினர்.

முன்னதாக மதுரையில் பேசிய நடிகர் விஷால், ‘தயாரிப்பாளர் களது குறைகளை கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். முக்கிய 12 கோரிக்கைகளை 12 மாதங்களில் நிறைவேற்றவில்லை எனில் உடனே ராஜினாமா செய்வோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com