தம்புள்ளை நகரின் பிரதான இடங்களில் பாதுகாப்பு கமராக்கள்

தம்புள்ளை நகரின் பிரதான இடங்களில் பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரவின் ஆலோசனைக்கமைவாக தம்புள்ளை நகரிலும், அதனை அண்மித்த பொது இடங்களிலும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் களவு மற்றம் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், இந்நகரத்திற்கு வரும் உள்ளுர் – வெளியூர் உல்லாசப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாத்தளை மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com