தமிழ் மொழித்தினப்போட்டி – டிக்கோயா தமிழ் மகா வித்தியாம் மாவட்ட மட்டத்திற்கு தெரிவு

DSC08395 (1)அட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் மொழித்தின போட்டியில் டிக்கோயா தமிழ் வித்தியாலதிருந்து மூன்று நிகழ்ச்சிகள் மாவட்ட மட்டதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.ஜே.நிகலஸ் தெரிவித்தார்.

தமிழ் மொழித்தினத்தினையொட்டி அட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் தின போட்டியில் கடந்த சில தினங்களாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மற்றும் புனித ஜோன் பொஸ்கோ ஆகிய கல்லூரிகளில் போட்டிகள் நடைபெற்றன.

இப்பாடசாலையில் நடைபெற்ற போட்டிகளில்  சிறுகதை, போட்டியில் செ.சரமிளா என்ற மாணவி முதல் இடத்தினையும், இலக்கணம் போட்டியில் செ.ஸ்ரீதேவிகா  என்ற  மாணவியும் தமிழறிவு போட்டியில் பி.சுசந்திகா, செசரண்யா, ம.நிஸாந்தினி, யோ.ரம்யலதா, செ.ஸ்ரீதேவிகா ஆகிய மாணவிகள் முதலாம் இடங்களை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com