தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைவு வெளியீடு – பெருமளவான மக்கள் பங்கேற்பு

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட  அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு இன்று (31.01.2016) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. நிகழ்வில் சமயத் தலைவர்கள், வைத்தியர்கள், மக்கள் அமைப்புக்களின் பிரதிதிகள் கலந்துகொண்டதோடு அரங்கு நிறைந்த அளவில் பெருந்திரளான மக்களும் ஒன்றுகூடியிருந்தனர்.

முன்னதாக இந் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறுபதாக ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. நேற்றையதினம் சில அழுத்தங்கள் காரணமாக அங்கு நடாத்தமுடியாதநிலையில் வீரசிங்கம் மண்டபத்திற்கு நிகழ்வு மாற்றப்பட்டிருந்தது.

நிகழ்வைப் புறக்கணிக்குமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் நேற்றைதினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமாக சி.வி.விக்கினேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com