தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்தாலும் நாங்கள் இருக்கிறோம் – மாவை

தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது ஆட்சிகாலத்திலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிக மிக கொஞ்சமே என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஜனாதிபதி முன்னிலையில் கூறியுள்ளார்.

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” அலுவலக திறப்பு விழா வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உ ரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்,

பட்டதாரி மாணவர்கள் வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தை ந டத்தி வருகின்றனர். 30 வருடங்களாக மோசமான போரினால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்றைக்கு பட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

இதேபோல் படையினரின வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறியிருந்தீர்கள். மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் இல்லை. எனவே மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் நாம் மிகுந்த நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன்.

உங்களுடைய ஆட்சி காலத்திலும் நாங்கள் மிக மிக சிறிய அளவிலான நன்மைகளையே பெற்றிருக்கிறோம். இதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் அதன் ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அப்படி நடைமுறைப்படுத்தப்படும் போதே இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உண்டாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com