சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் மாறாக செயற்பட்டுவரும் சுமந்திரன் எப்படி தமிழர் பிரதிநிதியாக இருக்க முடியும் ?

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் மாறாக செயற்பட்டுவரும் சுமந்திரன் எப்படி தமிழர் பிரதிநிதியாக இருக்க முடியும் ?

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முற்றிலும் மாறாக ஜெனீவாவில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எவ்வாறு உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்கமுடியும்? ஏன யாழ். மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிறிலங்கா அரசுக்கு ஈராண்டு கால அவகாசம் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பாக பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு,

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு வணக்கம்,

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியுடைய பிரதிநிதியாக அவரால் செயற்பட முடியுமே தவிர தமிழ்மக்களின் பிரநிதிநியாக செயற்பட முடியாது என்று கூறியிருந்தீர்கள் உண்மையில் ஒரு நேர்மையான கருத்து. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையான விடயம் இவ்வாறு ஒரு கருத்தைப் பதிவு செய்தமைக்காக முதலில் தங்களுக்கு மனபூர்வமான நன்றிகள்

ஆனால் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி பேரணிகளில் பெருமளவில் பங்குபற்றிய காணாமல் போன உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூகத்தினர், மதகுருமார்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனையோரினதும் முக்கியமான கோரிக்கை இலங்கைக்கு ஐ.நாவில் கால அவகாசம் வேண்டாம் காணமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்பதே.

இது தங்களுக்கு தெரியாதது அல்ல. எல்லா தரப்பு மக்களும் ஒன்றுபட்டு ஒரே குராலாக ஒலிக்கும் போது மக்கள் பிரநிதிநியான தாங்கள் ஏன் அவ் மக்களின் பிரநிதியாக அவர்களின் குரல்களாக ஒலிக்கவில்லை.

கால அவகாசம் வழங்குவது தங்களுடைய கட்சியின் கொள்ளைகளுக்கு எதிரானது என்று கூறி மக்களின் ஒரு மித்த குரலை ஏற்காமல் அந்த மக்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் வராமல் வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவது எவ்வாறு தங்களை ஒரு மக்கள் பிரதிநியாக ஏற்றுக்கொள்ளமுடியும்?

கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் நீங்கள் கூறியது போல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல ஜனாதிபதியால் நியமதிக்கப்பட்டவர் அந்த வகையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதிpயின் விருப்பங்களைக் கொண்டு செல்லவேண்டும்.

ஆனால் தாங்கள் எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தானே அந்த வகையில் அவ் மக்களின் விருப்பத்தைக் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பெறுப்பும் தங்களுக்கு உள்ளது என்பது நான் சொல்லி தங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்

அவ்வாறு இருக்கையில் நீங்கள் உங்களுக்கு வாக்களித்து தங்களின் பிரதிநிதியாக்கிய மக்களின் விருப்பங்களையும் அவர்களின் ஒன்றுபட்ட ஐநாக்கான செய்தியையும் தாங்கள் ஐ.நாவில் சொல்லுகின்றீர்களா?

மாறாக மக்களின் விருப்பம் உங்களுடைய கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி ஒதுக்கி விடுகின்றீர்கள் அவ்வாறு இருக்கையில் தாங்கள் எவ்வாறு மக்கள் பிரநிதிநி ஆக முடியும்?

நன்றி -வரதராஜன் பார்த்திபன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com