தமிழ் மக்­கள் அந்த ஒளியைத் தேடு­கின்­ற­னர்! – சம்­பந்­தன்

இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர். இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.  தேசிய தீபா­வளி தின நிகழ்வு ஜனாதிபதி மாளி­கை­யில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றும்­போதே எதிர்­கட்­சித் தலை­வர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தீபா­வளி என்­ப­தன் அர்த்­தம், இருள் அகன்று ஒளி பிறக்க வேண்­டும் என்­ப­தா­கும். தமிழ் மக்­கள் இன்று அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர். அடுத்த தீபா­வளி அர்த்­த­மு­டை­ய­தாக இருக்­க­வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டது அல்ல. அது சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் காலத்­தில் ஏன் அதற்கு முன்­னர் இருந்தே முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

தற்­போது நடை­பெ­றும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் தோற்­கக் கூடாது. அது வெற்­றி­பெற வேண்­டும். தமிழ் மக்­க­ளுக்கு அர்த்­த­முள்ள தீர்வு கிடைக்­க­வேண்­டும். என்­றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com