தமிழ் பொலிஸாருக்கு பற்றாக்குறை !

காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட இளவாலை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பொலிஸாருக்கு பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
11 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 5 பொலிஸாரே கடமையாற்றுவதாகவும், அவர்களில் சிலர் சுழற்சி முறை விடுமுறையில் செல்வதானனால் மிகுதி நான்கு பேர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சிலர் விசேட பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் முறைப்பாடுகளினை பதிவு செய்வதில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகிறது.

குற்றத்தடுப்பு பிரிவில் தமிழ்பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்மையினால் ஏணை பிரிவுகளில் உள்ள பொலிஸாரை கொண்டே தமிழ் மொழி மூலமாக எழுத்து மூலமான செயற்பாடுகளும், வாய்மொழி மூல வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவேண்டிய நிலை உள்ளது. கடந்த காலங்களில் பணியாற்றி பொறுப்பதிகாரிகள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவை நிமித்தம் அதிகளவு பொலிஸார் இளவாலைக்கு உள்வாங்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவர்களில் அனேகமானோர் வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ள போது அவர்களுக்கு பதிலாக சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களே இணைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு கூட தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூட நிஜமிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமா பெண்கள் தமது அந்தரங்க விடயங்கள், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் தெளிவான வாக்குமூலத்தினை கூட வழங்க முடியாத கூச்ச உணர்வு காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கூட தமிழ்மொழிமூலமான உத்தியோகத்தர்கள் மேற்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் சந்தேக நபர்களை நீதிமன்றிற்கு அழைத்து செல்லப்பட்டு முற்படுத்தும் போது, தாக்கல் செய்யப்படும் ‘’பீ’’ அறிக்கை சிங்கள மொழியில் வாசிக்கப்படுவதானால் உரிமைமீறல் பிரச்சிணை ஒன்று காணப்படுகிறது. அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் நீதிவானுக்கு கூறப்படும் விடயம் என்னவென்பது தொடர்பில் தெரியாத நிலை உள்ளது. எனவே இவ் விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அதிகளவான தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com