தமிழ் பாராளுமன்ற ஒன்றிய யோசனை தோல்வியில் முடிந்தது ஏன்? – தமிழ் கூட்டமைப்பு தான் காரணமா ? – மனோ கணேசன் என்ன சொல்கிறார்…?

இதுவும் இந்த பரஸ்பர புரிந்துணர்வு இன்மை பிரச்சினைதான். இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்களும், தலைமையும் தயார். ஐதேக, ஸ்ரீல.சுக தமிழ் எம்பீக்கள் தயார். இதுபற்றி நீங்கள் கூட்டமைப்பு எம்பீக்களிடம் கேட்டீர்கள் என்றால் பெரும்பாலோர் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனாலும் இது கைகூடவில்லை.
இதுபற்றி நீங்கள் கூட்டமைப்பு தலைவரிடம்தான் கேட்க வேண்டும். ஒருவேளை நான் பார்க்காத ஒரு கோணத்தில் பார்த்து எனக்கு விளங்காத ஒரு காரணம் அவருக்கு தெரிகிறது போல் இருக்கிறது. அவரை நான் மதிக்கிறேன். ஆகவே அதை நான் தற்போது கைவிட்டு விட்டேன். மேலும் எனக்கு இதுபற்றி வீடு வீடாக தேடி போய் பேசி ஆதரவு திரட்ட முடியாது. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.
அரசியல் அதிகார பகிர்வு என்ற விடயத்தை ஒருபுறம் வைத்து விட்டு, தமிழர் நாடு முழுக்க எதிர்நோக்கும் அன்றாட மனித உரிமை, மனித நேய சிக்கல்கள் தொடர்பில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடையாளங்களையும் ஒருபுறம் வைத்து விட்டு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று நாங்கள் சுமார் 22 முதல் 26 தமிழ் எம்பீக்கள் ஜனநாயக பலத்துடன், ஜனாதிபதி, பிரதமர், ஜேவிபி, மகிந்த உட்பட எதிரணியினர், பெளத்த மத பீடத்தினர், என எல்லோரையும் சந்தித்து உரையாடும் போது, அது நாட்டுக்குள் பெரும் எழுச்சியை, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விழிப்பை ஏற்படுத்தும் என்பது என் எண்ணக்கரு.
ஆனால், உலகில் இது புது விஷயம் அல்ல. அமெரிக்காவிலும்கூட இது போன்ற கறுப்பின எம்பீக்களின் ஒன்றியம் உண்டு.
ஆனால், இதையும்கூட செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் தமிழர்கள் நாம் எங்கே ஒரு அடையாளத்துக்குள் வருவது? காலம் பதில் சொல்லும் என்று இந்த யோசனையை கைவிட்டுவிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com