தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல் – மூதூரில் பல மணி நேரம் பதட்டம்

160421162442_sri_lanka_tamil_farmers_512x288_bbc_nocreditகாணிப் பிணக்குகள் காரணமாக தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மூதூர் பிரதேசத்தில் இன்று (21) பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாபோதிலும் கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான இழுபறிகள் இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

160421161754_sinhala_farmers_srilanka_512x288_bbc_nocredit

அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டதாகவும் அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழல் நிலவிய நிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் பொலிசாரின் கவனத்திற்கு குறித்த விடையத்தைக் கொண்டுசென்ற பின்னர், பொலிசாரின் தலையீட்டில் முறுகல் நிலை தவிர்க்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதாலேயே அங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com