தமிழ் எம்.பிக்கள் ஓரணியாய் பணியாற்றுவோம் – கூட்டமைப்பிற்கு மனோ கணேசன் பகிரங்க அழைப்பு

அரசியல் தீர்வு விடையத்திற்கு அப்பால் காணி விடுவிப்பு, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்” எனினும் அமைப்பினை உருவாக்கி பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரிடம் கதைத்ததாகவும் அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன் அவ்வாறு பணியாற்ற கூட்டமைப்பு முன்வருமா? என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் தனது சமூக வலைத்தளமூடாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இப்பணியாற்ற முன்வருவார்களா என கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவின் முழுவடிவம் இணைக்கப்பட்டுள்ளது,

அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன.
ஆனால், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம் ஆகியவை உள்ளிட்ட தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மத்தியில் ஒத்த கருத்துதான் உண்டு.
இவை தொடர்பாக, ஆளும் அணியில் இருப்பவர்கள் தனியாகவும், எதிரணியில் இருப்பவர்கள் தனியாகவும் அரச உயர்மட்டத்துடன் பேசுவது ஒரு முறைமையாகும். ,
அடுத்தது, அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர்மட்டத்துடன், எதிரணி சிங்கள தலைவர்களுடன், கட்சிகளுடன், தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் காணி, கைதிகள், காணாமல் போனோர், இன்னும் பல பொது விவகாரங்கள் தொடர்பில் கலந்து பேசுவது அது இன்னொரு முறைமையாகும்.
இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் குறிப்பாக, கூட்டமைப்பும் (TNA), கூட்டணியும் (TPA), பாராளுமன்றத்தில் கூடி பேசி, “தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்” அமைக்க வேண்டும் என்றும், இதன்மூலம் தமிழ் மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பில் அரச, எதிரணி சிங்கள கட்சிகளுடன் பேசுவோம் என்றும், என் யோசனையை நான் முன்வைத்தேன்.
இந்த எனது யோசனை திட்டம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன், சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன் ஆகியோரிடம் நான் ஒரு மாதத்துக்கு முன்பே தெரிவித்துள்ளேன். ஆனால், இதுவரை அவை தொடர்பில் கூட்டமைப்பிடமிருந்து தெளிவான பதில் இல்லை.
போராடும் அப்பாவி மக்கள், குறிப்பாக தாய்மார்கள் படும்பாட்டை பார்க்க மனம் கொந்தளிக்கின்றது. ஒரு அமைச்சராக இருந்துக்கொண்டு இதைவிடவும் என்ன செய்ய முடியும் என நான் யோசிக்கிறேன். எனது யோசனைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) தயாரா, என எவராவது கேட்டு சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com