சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாற்றுத் தவறுகளை செய்ய மாட்டேன் என்கிறார் முதலமைச்சர் விக்கி

தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாற்றுத் தவறுகளை செய்ய மாட்டேன் என்கிறார் முதலமைச்சர் விக்கி

தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது.

தமதுஅரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.விவ.pக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலாநிதி க.சர்வேஸ்வரனால் எழுதப்பட்ட நூலின் அறிமுக நிகழ்வு நல்லூரில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு உரையாற்றிய முதலமைச்சர் வரலாற்றில் இருந்து தமது பிழைகளை இனங்காண மறுக்கின்றார்கள். எமது அரசியல் வரலாற்றில் சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் இரண்டாயிரமாம் ஆண்டுதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை வரையான தமிழ் அரசியல் தலைவர்கள் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவர்களாக இருந்த போதும் எப்போது மேமேலாதிக்கச் சிந்தனையுடன் செயற்பட்ட சிங்களத் தiலைமைகளுக்கு எம்மவரின் அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் தமிழ்த் தலைமைகளைப்பிரித்தாளும் தன்மைகளை மேலோங்கச் செய்வதற்கும் முடியுமாக இருந்தது. காரணம் எமது தலைமைகள் புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள்.

பேரறிஞரான கணிதவியல் பேராசிரியரான சி.சுந்தரலிங்கம் அவர்கள் சிங்களத் தலைவர்களின் புகழ்ச்சியில் மயங்கி தம் இனத்துக்குக் கெடுதல் விளைவித்த“சிங்களவர் மட்டும்”அமைச்சர் குழாமை அமைக்க அடிஎடுத்துக் கொடுத்தார். அவ்வளவுக்கும் 5ம் தரத்திற்குமேல் படிக்காத சிங்களத் தலைவர் ஒருவர் பேராசிரியரை“உன்னைவிட இந்தவையத்துள் யாருண்டு”என்றுகேட்டதால் அதில் மயங்கி தனது கணக்கியல் திறனை அவருக்குக் காட்டிவிட்டார். இப்பொழுது எங்கள் தலைமைத்துவத்தினரிடையேயும் தம்மைவிட எவரும் இல்லை என்ற சிந்தனை இருந்து வருகின்றது. இவ்வாறான சிந்தனை உடையவர்களைச்சிங்களத் தலைவர்கள் இலேசாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இன்று பலரும் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லையென்று என்னைப் பேசுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்குரிய உரித்துக்கள் முதலில் உறுதிசெய்யப்படவேண்டும். அதன் பின்னர் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கமுடியும் என்பதே எமது கொள்கை வழிச்சிந்தனை. உரித்துக்கள் எதுவும் உறுதிசெய்யப்படாதநிலையில் வழங்கப்படுகின்றஅபிவிருத்திகள் அனைத்தும் ஏதோ ஆட்சியாளர்களின் அன்பளிப்புக்களாக கருதப்படுமேயன்றி அது தமிழர்களின் உரித்துக்களாக கொள்ளப்படமாட்டா.நாம் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும்.எமது இனம் எப்படிப்போனாலும் பரவாயில்லை அபிவிருத்திகள் மட்டும் நடைபெறவேண்டும் எனநான் சிந்தித்திருப்பின் எனது தனிப்பட்ட நட்புக்களினூடாக பலவற்றை சாதித்திருக்க முடியும்.கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். அங்கு கல்வி கற்றவன்.ஆனால் எதிர்காலத்தில் நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன். இதனால்தான் எனது தனிப்பட்ட நட்புக்களையும் துறந்து உரித்துக்களுக்காகத்தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றேன்.

அண்மையில் ஜனாதிபதி தமிழ்த் தலைவர்களுள் என்னை மட்டும் தனது செயலணியில் சேர்த்திருந்தார். ஆனால் எமது உரிமைகளைக் கேட்டு நான் செயலணியைப்பகிஷ்கரித்துள்ளேன். எனது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவிருக்கின்ற தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டத்திலேயே வெளிப்படுத்த இருப்பதால் நான் எனது எதிர்கால அரசியல் பற்றி தற்போது பேசாது விடுகின்றேன்.எனினும் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தலைமைத்துவங்களின் தவறுகளை நாம் இனிமேலும் விடக் கூடாது என்பதில் நான் திடமாக உள்ளேனென முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com