தமிழ் அரசியல் கைதிகள் 31 பேர் பிணையில் விடுதலை

இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேருக்கு இன்று மாலை கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது. முன்னதாக இன்று காலை அவர்கள் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டபோது, சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்துக்கு வருகை தராததால், அவர்களது விளக்கமறியல் இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் பின்னர் சட்டமா அதிபர் அலுவலகம் அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com