தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்

Prisonerதமது விடுதலையினை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ம் திகதி புதன்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.இலங்கை அரசினால் பொதுமன்னிப்பளித்து விடுவிப்பதான அறிவிப்பு ஏதும் விடுவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ள நிலையினில் புனர்வாழ்வின் கீழான விடுதலை மற்றும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களிற்கு விசாரணைகளை மாற்றுவது தொடர்பிலான கோரிக்கையினை முன்னிறுத்தியே உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக அனுராதபுரம் சிறையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் போராட்டத்தினில் குதிக்கவுள்ளதாகவும் அவர்களை தொடர்ந்து ஏனைய சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளும் போராட்டத்தினில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் கைதிகளது பெற்றோர் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பினில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக அறிவித்திருப்பதாகவும் பெற்றோர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரியிருந்த கால அவகாசத்தினுள் எதனையும் செய்திராத நிலையினிலேயே தமிழ் அரசியல் கைதிகள் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் பெற்றோர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds