சற்று முன்
Home / செய்திகள் / ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி’ – கலந்துரையாடலுக்கு அழைப்பு

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி’ – கலந்துரையாடலுக்கு அழைப்பு

‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி’ எனும் தலைப்பில் நாளை வெள்ளிக்கிழமை (01.06.2018) பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட அறை இலக்கம் 207 இல் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், சட்டத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமகால சட்ட விடயங்களுக்காக அரங்கத்தோடு இணைந்து நடைபெறும் குறித்த கலந்துரையாடலில் அண்மையில் அடையாளம் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி பிரதான உரையை அடையாளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் யாழ் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவருமான குமாரவடிவேல் குருபரன் வழங்கவுள்ளார்.

பிரதான பதிலுரையை அருட்பணி ம. சக்திவேல், அழைப்பாளர், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் வழங்கவுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com